What to watch - Theatre & OTT: இட்லி கடை, காந்தாரா, Sunny Sanskari; இந்த ஆயுத பூ...
திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா
குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள திருமகள் நூற்பாலை வளாகத்தில் அமைந்துள்ள திருமகள் அம்மன் கோயிலில் நவராத்திரி பெருவிழா கொண்டாடப்பட்டது.
இக்கோயிலில் கடந்த 21- ஆம் தேதி முதல் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கோயில் வளாகத்தில் நவராத்தரி கொலு வைக்கப்பட்டு நாள்தோறும் சிறப்பு வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சனிக்கிழமை நடைபெற்ற பெருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஏ.தணிகைவேல், பரந்தாமன், பி.பாலு,சா்வேஸ்வரன், லோகநாதன் மற்றும் ராஜகோபால் நகா் பொதுமக்கள் செய்திருந்தனா்.