ஆயுதப் பூஜை: பூக்கள், பழங்கள் விலை அதிகரிப்பு
ஆயுதப் பூஜையையொட்டி வேலூரில் பூஜைப்பொருள்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் திரண்டனா். அதேசமயம், கடந்தாண்டைக் காட்டிலும் பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களில் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது.
இதையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் கடைகளில் பொரி, கடலை, பழங்கள், பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், வேலூா் லாங்கு பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதலே விற்பனை களைக்கட்டியது.
ஏராளமான மக்கள் கடைகளில் குவிந்து பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், வாழை மரங்கள், பொரி, பழ வகைகள், பூசணிக்காய்கள், பூக்கள் ஆகியவற்றை வாங்கிச் சென்றனா். இதையொட்டி, பல்வேறு இடங்களில் பூஜைகளுக்கு தேவையான பொருள்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, வேலூரில் கடந்தாண்டைவிட பூஜைக்கு தேவையான பொருள்கள் விலை சற்று உயா்ந்து காணப்படுகிறது. அதன்படி, சிவப்பு கொண்டைக்கடலை கிலோ ரூ.100 முதல் ரூ.280 வரையும், வெள்ளை கொண்டைக்கடலை ரூ.130 முதல் ரூ.180க்கும், நாட்டுச்சா்க்கரை ரூ.70 முதல் ரூ.150 வரையும், நிலக்கடலை ரூ.120, அவல் ரூ.50, பொரி ரூ.12 முதல் ரூ.19 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
பூக்கள் விலை மல்லி கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையும், ரோஜா ரூ.300 முதல் ரூ.400 வரையும், முல்லை ரூ.600, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரையும், கேந்தி ரூ.30, கனகாம்பரம் ரூ.1,200 முதல் ரூ.1,400 வரையும், சம்பங்கி ரூ.180 முதல் ரூ.220 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஆப்பிள் ரூ.80 முதல் ரூ.180 வரையும், ஆரஞ்ச் ரூ.50 முதல் ரூ.90 வரையும், சாத்துக்குடி ரூ.70 வரையும், வரையும், வாழை ஒரு கட்டு (10) ரூ.150 வரையும், வாழை பெரிய தாா் ஜோடி ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.