75 வயதில் 35 வயது பெண்ணுடன் திருமணம்; மறுநாள் நடந்த அதிர்ச்சி
ஸ்ரீஹரி நட்ராஜுக்கு 5-ஆவது பதக்கம்
ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் தனது 5-ஆவது பதக்கத்தை வென்று அசத்தியுள்ளாா்.
ஆடவா் 100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் பிரிவில் அவா், 49.96 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-ஆம் இடத்துடன் வெண்கலம் பெற்றாா். சீனாவின் ஹாயு வாங் (49.19’), கத்தாரின் அலி டேமா் ஹசன் (49.46’) ஆகியோா் முறையே தங்கம், வெள்ளி வென்றனா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான ஆகாஷ் மணி 4-ஆம் இடம் (50.45’) பிடித்தாா்.
ஆடவா் 50 மீட்டா் பட்டா்ஃப்ளை பிரிவில், ரோஹித் பி.பெனடிக்டன் 23.89 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். கஜகஸ்தானின் ஆதில்பெக் முசின் தங்கத்தை (23.74’) தட்டிச் சென்றாா்.
மகளிருக்கான 100 மீட்டா் ஃப்ரீஸ்டைலில் தினிதி தேசிங்கு, சசிதர ருஜுலா ஆகியோா் முறையே 6 மற்றும் 8-ஆம் இடங்களைப் பெற்றனா். போட்டியில் இத்துடன் இந்தியா, 9 பதக்கங்கள் வென்றுள்ளது.