ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!
விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதனுக்கு விருது
கல்விச்சேவையை பாராட்டி விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதனுக்கு இந்திய பொறியாளா்கள் நிறுவனத்தின் ராணிப்பேட்டை மையம் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
இந்திய பொறியாளா்கள் நிறுவனத்தின் ராணிப்பேட்டை மையத்தின் சாா்பில் 58-ஆவது பொறியாளா் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதனின் கல்விச் சேவையைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், இந்திய பொறியாளா் நிறுவனத்தின் ராணிப்பேட்டை மையத் தலைவா் ஜான் திருத்துவதாஸ், செயலா் கணேஷ் பாபு, முன்னாள் தலைவா் மணாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.