GV Prakash: "இது லெஜண்ட் பயன்படுத்திய பியானோ" - தேசிய விருதுக்கு ரஹ்மான் அளித்த அன்புப்பரிசு!
71வது தேசிய விருதுகளில் சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருதை வென்றார் ஜி.வி. பிரகாஷ். இது அவர் வாங்கும் இரண்டாவது தேசிய விருதாகும்.
இந்தச் சாதனைக்கு ஜி.வி. பிரகாஷின் குருவும் மாமாவுமான முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தான் பயன்படுத்திய பியானோவைப் பரிசாக அளித்துள்ளார்.


GV Prakash ட்வீட்
இது குறித்து, "நான் பெற்றதிலேயே மிகச் சிறந்த பரிசு இதுதான். இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த அழகான வெள்ளை பியானோவை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்" எனப் பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
மேலும் ரஹ்மானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, "மிக்க நன்றி சார். இது மிகவும் அர்த்தமுள்ள ஒன்று" என்றார்.
அத்துடன், "இந்தப் பியானோ லெஜண்ட் (ரஹ்மான்) அவரே பயன்படுத்திய ஒன்று. இதை விடச் சிறந்த பரிசாக எதைக் கேட்க முடியும்" என்றும் நெகிழ்ந்துள்ளார்.
The best ever gift I recieved . @arrahman sir gifted me this beautiful white grand piano for receiving the National awards for the second time . Thanks a lot sir this means a lot . The piano used by the legend himself ❤️ . What more better gift can I ask for ❤️ pic.twitter.com/ieDIV0bqfS
— G.V.Prakash Kumar (@gvprakash) October 1, 2025
ஜி.வி.பிரகாஷ் குமார், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்துக்காகச் சிறந்த இசையமைப்பாளர் (பாடல்) விருதைப் பெற்றார். இந்த படத்தில் வந்த 'வா வாத்தி' பாடல் தமிழகம் தாண்டி ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.