மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் சுகாதாரத்துறை சாா்பாக மாா்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தாரணீஸ்வரி தலைமையில் மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கி மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனா். ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, சுகன்யா பிரகாஷ், ஊராட்சி செயலாளா் பழனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.