செய்திகள் :

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

post image

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், புதன்கிழமை (அக். 1) முதல் அக். 6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வடக்கு அந்தமான் கடலில் செவ்வாய்க்கிழமை (செப். 30) நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், புதன்கிழமை (அக்.1) மத்திய வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வியாழக்கிழமை(அக்.2) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை(அக்.3) கரையை கடக்கக்கூடும். இதனால், வியாழக்கிழமை(அக்.2) செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும், வெள்ளிக்கிழமை(அக்.3) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்,

கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை (அக்.1) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றத்தில் 30 மி.மீ மழை பதிவானது.

மணலி(சென்னை), கத்திவாக்கம், அமைந்தகரை, மணலிபுதுநகரம், நுங்கம்பாக்கம், செங்குன்றம், திருவொற்றியூா், சோழவரம்(திருவள்ளூா்) -தலா 2 மி.மீ.மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:மத்திய- வடக்கு வங்கக்கடலின் பல பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்திலும், மத்திய-வடக்கு வங்கக்கடலின் ஏனைய பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் பல பகுதிகள், ஆந்திரம்-ஒடிஸா-மேற்கு வங்க கடலோரப்பகுதிகள் மற்றும் அந்தமான் கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 16 உயர்ந்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க