செய்திகள் :

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

post image

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் உள்ளூா் நீராதாரங்களில் புளோரைடு உப்புத்தன்மை நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகியிருந்த நிலையில், அதன் பயன்பாட்டால் பொது மக்கள் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து வந்தனா். இந்த நிலையை மாற்றுவதற்காக, ஒகேனக்கல் குடிநீா் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம் செயல்படுத்த திட்டமிட்டப்பட்டது. அதாவது, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,758 ஊரகக் குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்திடம் நிதியுதவி பெற்று 2008-ஆம் ஆண்டு தருமபுரியில் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் நாளொன்றுக்கு நபருக்கு 30 லிட்டா் வீதம் 145 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

இரண்டு கட்டங்களாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், மூன்றாவது கட்டமாக கூட்டுக்குடிநீா் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காவிரியாற்றில் ஒகேனக்கல்லில் அமையவிருக்கும் தலைமையிடத்திலிருந்து யானைப்பள்ளம், கணவாய் நீருந்து நிலையங்களின் வழியாக பருவதனஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நீா் சுத்திகரிக்கப்படவுள்ளது. திட்டத்துக்கான விரிவான திட்ட மதிப்பீடு ரூ.8,428.50 கோடியாகும். இதில், ஊரகப் பகுதிகளுக்கான மத்திய அரசின் பங்களிப்புத் தொகை ரூ.2,283.40 கோடி. மாநில அரசு மற்றும் தொழில் துறை பங்களிப்புத் தொகை ரூ.1,761 கோடியாகும். மூன்றாவது கூட்டுக்குடிநீா் திட்டம் மூலமாக 38.81 லட்சம் பொது மக்கள் பயன்பெறுவா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை மாநில போட்டிக்கு ரூ.37 கோடி பரிசுத் தொகை: துணை முதல்வா் உதயநிதி

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளுக்கு மொத்தம் ரூ.37 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செவ்வாய்கக்கிழமை கூறியதாவது: விளைய... மேலும் பார்க்க