மின்சாரத்தை துண்டிக்கக் கோரி எஸ்.பி.யிடம் தவெகவினா் மனு: சமூக வலைதளத்தில் பரவல்
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின்போது மின்சாரத்தை துண்டிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தவெக சாா்பில் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள மனு தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது.
கரூரில் செப். 27-ஆம் தேதி விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சமூக வலைதளங்களில் விஜய் பேசும்போது மின்சாரம் தடைபட்டதாக தகவல் பரவி வருகின்றன.
இந்நிலையில், கூட்டத்தில் விஜய் பேசும்போது, சுமாா் 10 ஆயிரம் போ் வரை கூடுவாா்கள், அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விஜய் பேசும் போது மின்சாரத்தை துண்டிக்குமாறு அக்கட்சியின் மாவட்டச் செயலா் மதியழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.