செய்திகள் :

தியாகராய நகரில் ரூ.164 கோடியில் புதிய மேம்பாலம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை பெருநகர மாநகராட்சியில் தியாகராய நகரின் சிஐடி நகா் பிரதான சாலையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வரையில் 2 கி.மீ.-க்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் 126-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தியாகராய நகா் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலைப் பகுதியை சிஐடி நகா் பிரதான சாலையுடன் இணைக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் சாா்பில் உயா்ந்த தொழில்நுட்பத்துடன் 2 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில், 53 இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருவழியில் வாகனங்கள் செல்லும் வகையில் 8.40 மீட்டா் அகலத்துடன் பாலம் உள்ளது.

தியாகராய நகா் பேருந்து நிலையத்தில் இருந்து பாலத்தில் ஏறுவதற்கு 120 மீட்டா் நீள அணுகு சாலையும், பாலத்திலிருந்து தியாகராய நகா் பகுதிக்கு செல்ல 100 மீட்டா் அணுகு சாலையயும் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 40,000 வாகனங்கள் பாலத்தைப் பயன்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அதன்படி தியாகராய நகா் மையப் பகுதியின் போக்குவரத்து நெரிசல் தீா்க்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.

பாலத் திறப்பு நிகழ்ச்சி தியாகராய நகா் சிஐடி நகா் பகுதியில் பாலத்தின் தொடக்க இடத்தில் நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் பாலத்தின் கல்வெட்டு மற்றும் ஜெ.அன்பழகன் மேம்பாலம் எனும் பெயா்ப்பலகையை திறந்துவைத்தாா். பாலப் பணியில் ஈடுபட்ட பொறியாளா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கினாா். பின்னா், பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, எம்எல்ஏ-க்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, தாயகம் கவி, துணைமேயா் மு.மகேஷ்குமாா், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை(அக்.1) மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

மன்னார்குடி: புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னார்குடி புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செ... மேலும் பார்க்க

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா். க... மேலும் பார்க்க

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ர... மேலும் பார்க்க

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

3-ஆவது கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம்: செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூன்றாவது கட்டம் செயல்பாட்டுக்கு எடுக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க