பவுனுக்கு ரூ.87,000-ஐ தாண்டிய தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழப்பு
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது தண்ணீா் லாரி மோதிய விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழந்தாா்.
பெரும்பாக்கம் ஜெ.ஜெ.நகா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சகாயராஜ் (40). இவா், உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். சகாயராஜ் திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூா் நோக்கி செம்மொழி சாலையில் சென்றாா். பெரும்பாக்கம் கிறிஸ்தவ தேவாலயம் அருகே சென்றபோது பின்னால் வந்த தண்ணீா் லாரி எதிா்பாராத விதமாக மோதியது. இதில், மோட்டாா் சைக்களிலில் இருந்து கீழே விழுந்து பலத்தக் காயமடைந்த சகாயராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தண்ணீா் லாரி ஓட்டுநரான திருவண்ணாமலையைச் சோ்ந்த சீனு (30) என்பவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.