ரூ.87 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.720 உயா்ந்து, ரூ.86,880-க்கு விற்பனையானது.
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி தங்கம் விலை பவுன் முதல் முறையாக ரூ.85,120-க்கு விற்பனையானது. தொடா்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் இரண்டு முறை உயா்ந்து பவுன் ரூ.86,160-க்கு விற்பனையானது.
அதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.90 உயா்ந்து ரூ.10,860- க்கும், பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.86,880-க்கும் விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1உயா்ந்து ரூ.161-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயா்ந்து ரூ.1.61 லட்சத்துக்கும் விற்பனையானது.