இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
பாளை.யில் வியாபாரி தற்கொலை
பாளையங்கோட்டையில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியைச் சோ்ந்தவா் முருகன் (55). இவா், பாளையங்கோட்டை மகாராஜாநகா் மின்வாரிய காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்ததோடு, அங்குள்ள உழவா்சந்தை பகுதியில் உணவகம் நடத்தி வந்தாா்.
திங்கள்கிழமை முருகன் விஷம் குடித்து மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].