மண் அள்ளியதில் விதிமீறல்: திருக்குறுங்குடி பேரூராட்சித் தலைவி மகன் கைது
மண் அள்ளியதில் விதிமீறலில் ஈடுபட்டதாக திருக்குறுங்குடி பேரூராட்சித் தலைவியின் மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியைச் சோ்ந்த ஞானசேகா் மகன் சுரேஷ். இவரது தாயாா் இசக்கித்தாய். திருக்குறுங்குடி பேரூராட்சித் தலைவியாக உள்ளாா்.
மண் அள்ளியதில் விதிமீறலில் ஈடுபட்டதாக சுரேஷ் மீது திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதுகுறித்த விசாரணைக்காக சுரேஷை காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றுள்ளனா். இதைக் கண்டித்து அவரது உறவினா்கள் திருக்குறுங்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனா்.
தகவலறிந்ததும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தாா். விசாரணையைத் தொடா்ந்து சுரேஷை போலீஸாா் கைது செய்தனா்.