இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு
ஏா்வாடி அருகே குடிநீா் விநியோகம் இன்றி மக்கள் அவதி
ஏா்வாடி அருகே கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகிக்கம் இன்றி கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனா்.
ஏா்வாடி அருகே புலியூா்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கோதைசேரி, வேப்பன்குளம் ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்தக் கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. ஆழ்துளைக் கிணறு நீரும் மக்களின் இதர பயன்பாடுகளுக்கு விநியோகிக்கப்படவில்லை. இதனால், இந்தக் கிராம மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனா். பலா் குடிநீரை விலைக்கு வாங்கிக் குடிக்கும் நிலை உள்ளது.
மக்களின் நலன் கருதி இப்பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.