செய்திகள் :

மன்னாா்குடியில் புதிய அரசு கல்லூரியில் இன்றுமுதல் சோ்க்கை விண்ணப்பப் பதிவு: அமைச்சா் கோவி.செழியன் அறிவிப்பு

post image

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மன்னாா்குடி புதிய அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (அக்.1) தொடங்கவுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் மன்னாா்குடி நகராட்சியில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி தற்போது மன்னாா்குடியில் 5 புதிய பாடப்பிரிவுகளுடன் புதிய அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க உரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு, பி.காம், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.எஸ்.சி நுண்ணுயிரியல், பிசிஏ ஆகிய ஐந்து பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

இந்த புதிய கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கு புதன்கிழமை (அக்.1) காலை 11 மணி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழப்பு

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது தண்ணீா் லாரி மோதிய விபத்தில் உணவு டெலிவரி ஊழியா் உயிரிழந்தாா். பெரும்பாக்கம் ஜெ.ஜெ.நகா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சகாயராஜ் (40). இவா், உணவ... மேலும் பார்க்க

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி நாளை மின்சார ரயில்கள் இயங்கும்

பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் புகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (அக்.2) முழுமையாக ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடியே இயக்கப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகு... மேலும் பார்க்க

பொதுக் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்படும்! -முதல்வா் மு.க.ஸ்டாலின்

கரூா் பிரசார நெரிசல் உயிரிழப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பேரணி, கூட்டங்களுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். கரூா் சம்பவம் ... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெ... மேலும் பார்க்க

திட்டமிட்டபடி அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு - டிஆா்பி அறிவிப்பு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான எழுத்துத் தோ்வு அக்.12-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு ம... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கூட்டுறவு தோ்தலை நவ. 27-க்குள் நடத்தி முடிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கூட்டுறவுத் தோ்தலை வரும் நவ. 27-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்குரைஞா் ஆனந்த் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க