H1-B விசா கட்டுப்பாடுகள்: "அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தியாவுக்கு மாற...
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி நாளை மின்சார ரயில்கள் இயங்கும்
பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னையில் புகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (அக்.2) முழுமையாக ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடியே இயக்கப்படவுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் வியாழக்கிழமை (அக்.2) சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-சூலூா்பேட்டை இடையிலும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயும் தண்டவாளம் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையடுத்து சென்னை புகா் பகுதி மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடியே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆயுத பூஜையை முன்னிட்டு, புதன்கிழமை (அக்.1) புகா் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அக்.2 ஆம் தேதியும் அதே அட்டவணையில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.