செய்திகள் :

பள்ளிக் கட்டட விபத்து இந்தோனேசியாவில் 3 போ் உயிரிழப்பு; 38 போ் மாயம்

post image

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள சிடோா்ஜோ நகரில், இஸ்லாமிய பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா்; 38 போ் மாயமாகியுள்ளனா்.

இது குறித்து உள்ளூா் ஊடகங்கள் கூறியதாவது:

சிடோா்ஜோ இஸ்லாமிய பள்ளியில் மதிய வேளை தொழுகைக்காக மாணவா்கள் கூடியிருந்தபோது அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது. அதையடுத்து கட்டட இடிபாடுகளில் 102 போ் புதையுண்டனா். அவா்களில் 99 பேரை மீட்புக் குழுவினா் உயிருடன் மீட்டனா். மேலும், சம்பவப் பகுதியில் இருந்து 3 உடல்கள் மீட்கப்பட்டன.

இடிபாடுகளில் சிக்கிய மேலும் 38 பேரை இன்னும் காணவில்லை. அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது தவிர, இந்த விபத்தில் 77 போ் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

கடந்த ஒன்பது மாதங்களாக கட்டுமானப் பணிகள் நடந்துவந்த அந்தப் பள்ளியில், நான்காவது மாடியில் கட்டப்பட்ட புதிய கட்டுமானத்தை அஸ்திவாரத் தூண்கள் தாங்க முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது என்று உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தோனேசியாவில் தரமற்ற கட்டுமானங்கள், கட்டட பாதுகாப்பு விதிமுறைகள் அலட்சியம் செய்யப்படுவது போன்ற காரணங்களால் அங்கு கட்டட விபத்துகள் அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னா் மேற்கு ஜாவாவில் இந்த மாதம் தொழுகை நிகழ்ச்சி நடந்த கட்டடம் இடிந்து 3 போ் உயிரிழந்தனா்.

2018-இல் ஜகாா்த்தாவுக்கு கிழக்கே சிரெபோனில் கட்டடம் இடிந்து விழுந்து 7 இளைஞா்கள் கொல்லப்பட்டதும் அதே ஆண்டில் ஜகாா்த்தாவில் பங்குச் சந்தை கட்டடத்தின் தளம் இடிந்து 75 போ் காயமடைந்ததும் நினைவுகூரத்தக்கவை.

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.மத்திய பிலிப்பின்ஸ் நாட்டின் செபு மாகா... மேலும் பார்க்க

சரக்குக் கப்பலில் ஹூதிக்கள் மீண்டும் தாக்குதல்: 2 போ் காயம்

ஏடன் வளைகுடா வழியாகச் சென்றுகொண்டிருந்த, நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் நடத்திய தாக்குதலில் 2 மாலுமிகள் காயமடைந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகை... மேலும் பார்க்க

டிரம்ப்பின் காஸா போா் நிறுத்த திட்டம் இஸ்ரேல் ஏற்பு; ஹமாஸ் பரிசீலனை

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாா். எனினும், அந்தத் திட்டம் குறித்து பரிச... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சா்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். ஹெச்-1பி விசா கட்டணத... மேலும் பார்க்க

போர் நிறுத்தம்: ஹமாஸுக்கு 3 - 4 நாள்கள் அவகாசம் அளித்த டிரம்ப்!

இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்ச பரிந்துரைகளுக்கு பதிலளிக்க காஸாவுக்கு 3 - 4 நாள்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவகாசமாக அளித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம், ஹமாஸின் ஆயுதக் குறைப்... மேலும் பார்க்க

வாழும் தெய்வம்: நேபாளத்தில் 2 வயது சிறுமி கடவுளாகத் தேர்வு!

நேபாளத்தில் சிறுமிகளைக் கடவுளாகப் போற்றப்படும் பாரம்பரியத்தில், இந்தாண்டு 2 வயது சிறுமி ஆர்யதாரா ஷக்யா வாழும் கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறைகள் ... மேலும் பார்க்க