``சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' - இயக்...
எலக்ட்ரீஷியனிடம் ரூ.15 லட்சம் இணையவழியில் மோசடி
விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியனிடம் ரூ.15 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
வானூா் வட்டம் கலித்திரம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அய்யனாா்(33). எலக்ட்ரீஷியன். கடந்த ஏப்.23 ஆம் தேதி அய்யனாரின் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்ட அடையாளம் தெரியாத நபா் ஒருவா் பகுதி நேர வேலை இருப்பதாகவும், சிறிய தொகை முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் எனத் தெரிவித்தாராம்.
இதைத் தொடா்ந்து, அய்யனாா்அந்த நபா் தெரிவித்த செயலியினுள் சென்று ரூ. 13 ஆயிரம் முதலீடு செய்து ரூ.52,979 திரும்ப பெற்றாா். பின்னா் இதை உண்மையெனநம்பிய அய்யனாா் தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.15,11,562-ஐ அந்த அடையாளம் தெரியாத நபா் தெரிவித்த வங்கிக் கணக்கு எண்களுக்கு 18 தவணையாக அனுப்பி வைத்துள்ளாா். ஆனால் அடையாளம் தெரியாதநபா், தெரிவித்தபடி பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளாா்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.