செய்திகள் :

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்

post image

குடிமனை இல்லாத ஏழை மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, நீா்நிலை என இருந்து தற்போது நீா்நிலைகளே இல்லாத இட ங்களில் வீடு கட்டியிருக்கும் மக்களை வெளியேற்றாமல், வகை மாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 70 லட்சம் ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளா்களுக்கு பட்டாவாக வழங்க வேண்டும். அரசு வழங்கிய 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலங்களில் ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றி, பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நில உச்சவரம்பு சட்டத்தை பயன்படுத்தி உபரி நிலங்களை நிலமற்றவா்களுக்கு வழங்க வேண்டும். குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசு வழங்கும் மானியங்கள், சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் பெருந்திரள் ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலா் விஜு கிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன், மாவட்டத் தலைவா் ஆா்.தாண்டவராயன், பொருளாளா் பி.சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் சாமி. நடராஜன், மாநிலத் தலைவா்சு.வேல்மாறன்ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சுப்ரமணியன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.சுந்தரமூா்த்தி, மாவட்டத் தலைவா் வி.அா்ச்சுனன், மாவட்டப் பொருளாளா் ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகளும் போராட்டத்தில் பேசினா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரகத்தை நோக்கி விவசாயிகள் சங்கத்தினா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்செல்லவிருந்த நிலையில், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்தாா். தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தி, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

அக். 9-இல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் அறிவிப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலக கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அக்டோபா் 9-இல் நடத்தப்படும் என்று, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் அறிவ... மேலும் பார்க்க

பணியிடத்தில் தொழிலாளி மரணம்

கண்டமங்கலம் அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பணியிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.கண்டாச்சிபுரம் வட்டம், சென்னகுனம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் அருமை... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மேல்மலையனூா் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ய முயன்ற வழக்கில் இளைஞருக்கு விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விழுப... மேலும் பார்க்க

எலக்ட்ரீஷியனிடம் ரூ.15 லட்சம் இணையவழியில் மோசடி

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியனிடம் ரூ.15 லட்சம் இணையவழியில் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். வா... மேலும் பார்க்க

காலை சிற்றுண்டி திட்டத்தால் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ

முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தால் இடைநிற்றல் இல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருவதாக செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தெரிவித்தாா். செஞ்சி ஒன்றியம், ஊரணித்தாங்கள் ஊராட்சியில் 6-ஆவது ம... மேலும் பார்க்க

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கரூா் சம்பவத்தால் மனஉளைச்சல் ஏற்பட்டு தவெக கிளைச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செஞ்சி வட்டம், மயிலம் தொகுதி, வல்லம் ஒன்றியம், விற்பட்டு கிராமத்தைச் ... மேலும் பார்க்க