செய்திகள் :

காசா விவகாரம்: `இன்னும் 3 - 4 நாள்களில்' - மீண்டும் ஹமாஸை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

post image

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடங்கிய போரில் இதுவரை காசாவில் 66,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை அதிபர் ட்ரம்ப் முன்வைத்திருக்கிறார்.

அந்தத் திட்டத்தில் காசாவில் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல், மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல் மற்றும் இஸ்ரேலிய படைகளை திரும்பப் பெறுதல் ஆகியவை அடங்கும்.

Israel-Hamas war

மேலும், ஹமாஸ் தனது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்றும், காசாவை எந்த வடிவத்திலும் ஹமாஸ் ஆட்சி செய்ய அனுமதிக்கப்படாது என்றும் அந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் விடுவிக்கப்படுவார்கள்.

பட்டினி மற்றும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள காசாவிற்கு முழு உதவியும் உடனடியாக அனுப்பப்படும் என்ற வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பேசிய ஹமாஸ், வழங்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் குறித்து குழுவிற்குள்ளும் மற்ற பாலஸ்தீன பிரிவுகளுடனும் விவாதிப்பதாகக் கூறியது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளார்.

இஸ்ரேலுடன் சேர்ந்து, பிரான்ஸ், கனடா, இந்தியா, ரஷ்யா போன்ற பல நாடுகள் காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டத்தை ஆதரித்து வரவேற்றுள்ளன.

இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``எனது திட்டத்தை பாலஸ்தீன போராளிக் குழு ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

நான் முன்மொழிந்துள்ள திட்டத்தில் அனைத்து அரபு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. முஸ்லிம் நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன. இஸ்ரேலும் கையெழுத்திட்டுள்ளது.

நாங்கள் ஹமாஸின் முடிவுக்காக காத்திருக்கிறோம். ஹமாஸ் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளப்போகிறதா இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.

ஒருவேளை இந்த திட்டம் செயல்படவில்லை என்றால், அது மிகவும் சோகமான முடிவாக இருக்கும். எனவே, ஹமாஸ் இந்த திட்டத்திற்கு பதிலளிக்க ஹமாஸுக்கு 3-4 நாட்கள் அவகாசம் உள்ளது. இல்லையென்றால் இஸ்ரேல் செய்ய வேண்டியதைச் செய்யும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டில் போலீசார்; காரணம் என்ன?

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் காயமடைந்துள்ள நிலையில் பாத... மேலும் பார்க்க

TVK Karur Stampede: சனிக்கிழமை 'மரண ஓலம்' முதல் செவ்வாய்க்கிழமை Vijay Video வரை | Elangovan Explains

'கரூர் துயரச் சம்பவம்' இதில் இரண்டு நாட்களுக்குப் பிறகு வாய் திறந்துள்ளார் விஜய். அவர் வெளியிட்ட வீடியோவில், இரண்டு முக்கியமான மெசேஜ்கள். இறுதியில் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார். இதற்கு பதில... மேலும் பார்க்க

US: செனட்டில் நிறைவேற்றப்படாத மசோதா; முடங்கிய அமெரிக்கா- பாதிப்புகுள்ளான மக்கள்

அமெரிக்காவில் செலவினங்கள் குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.அடுத்த நிதியாண்டிற்கான அமெரிக்க அரசின் செலவினங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த ம... மேலும் பார்க்க

கரூர்: ``இறந்தவர்களுக்கு நியாயம்; இருப்பவர்களுக்கு நீதி'' - அருணா ஜெகதீசனுக்கு வைரமுத்து வேண்டுகோள்

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற நீ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: ``பேராசையும், அதிகார தாகமும்தான் காரணம்'' - என்ன சொல்கிறார் சந்தோஷ் நாராயணன்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள்,... மேலும் பார்க்க

Gaza-Israel போர் உண்மையாக முடிவுக்கு வருமா? யார் இந்தசார் டோனி பிளேயர் ? `GITA'-வின் திட்டம் என்ன?

காசா போர்இஸ்ரேல் - காசா இடையே போர் தொடங்கி இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் போரில் 66,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதே நேரம் இஸ்ரேல், காசாவில் ஏற்படுத்த... மேலும் பார்க்க