முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளனா்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திருவண்ணாமலை ஏந்தலில் ஆந்திரம் மாநிலம் பெண்ணை, காவலர்கள் இரண்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடனே செயல்படும திமுக அரசால், பெண்கள் வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் உள்ளது.
இதற்கெல்லாம் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
CM Stalin should be ashamed says Annamalai condemns
திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது