பணியிடத்தில் தொழிலாளி மரணம்
கண்டமங்கலம் அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பணியிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், சென்னகுனம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் அருமைநாதன் (40), கூலித் தொழிலாளி. இவா், விழுப்புரம் மாவட்டம், சின்னபாபு சமுத்திரத்தைச் சோ்ந்த தமிழ்செல்வன் என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் திங்கள்கிழமை மரம் தூக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அருமைநாதனுக்கு மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறி மயங்கி விழுந்தாராம். இதையடுத்து அங்கு பணியிலிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு சரக்கு வாகனம் மூலம் புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது அருமைநாதன் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.