டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?
'ஜி.கே மணியின் மகனுக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவி!' - ராமதாஸ் அறிவிப்பு
பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அணி. மற்றொன்று பாமக தலைவர் அன்புமணி அணி.
சமீபத்தில் அன்புமணியை பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பு செல்லுபடி ஆகாது என்று அன்புமணி தரப்பு மறுத்துவிட்டது.
ஜி.கே மணியின் மகன்
இந்த நிலையில், தற்போது ராமதாஸ், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவர் பதவியை வழங்கியுள்ளார்.
இந்த ஆணையை தமிழ்குமரனுக்கு ராமதாஸ் வழங்கியபோது, அவருடைய மகள் காந்திமதியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முகுந்தன் பிரச்னை
பாமக இளைஞரணி தலைவராக காந்திமதியின் மகன் முகுந்தன் நியமிக்கப்பட்ட போது தான், ராமதாஸ், அன்புமணிக்கு இடையே பிரச்னை வெடித்தது.
முகுந்தன் கடந்த மே மாதம் இந்தப் பதவியில் இருந்து விலகிவிட்டார்.
இப்போது பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு இணையான பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தமிழ்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அன்புமணி எப்படி எதிர்வினையாற்ற உள்ளாரோ?