செய்திகள் :

RSS 100 கொண்டாட்டம்: அமெரிக்காவின் 50% வரி, நேபாள வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் - மோகன் பகவத் கருத்து

post image

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது.

அமெரிக்காவின் 50 சதவிகித வரி

அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி பிளஸ் 25 சதவிகித கூடுதல் வரி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் - பரஸ்பர வரி
ட்ரம்ப் - பரஸ்பர வரி

"அமெரிக்காவின் புதிய வரிகள் அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது மற்ற அனைவரையும் பாதித்துள்ளது.

ஒருவர் மற்றொருவரை சார்ந்தே இந்த உலகம் இயங்கி வருகிறது. எந்த நாடும் தனியாக இயங்க முடியாது. ஆனால், இந்தச் சார்பு கட்டாயமாக்கப்படக் கூடாது.

நாம் சுதேசியை சார்ந்து, நமது தற்சார்பில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், நட்பு நாடுகளிடம் நல்ல உறவைப் பேண வேண்டும். ஆனால், அது கட்டாயமாக இல்லாமல், நமது விருப்பத்துடனானதாக இருக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

நேபாள போராட்டம்

சமீபத்தில் நேபாளத்தில் நடந்த போராட்டம் குறித்து, 'ஒரு பக்கத்து நாடு நிலையற்றத் தன்மையோடு இருப்பது நல்லதல்ல.

இலங்கை, வங்கதேசம் மற்றும் சமீபத்தில் நேபாளம் என பக்கத்து நாடுகளில் மக்களின் கோபத்தால் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

இந்த மாதிரியான பிரச்னையை பாரதத்தில் கிளப்ப நினைக்கும் படைகள் இங்கே நாட்டிற்குள்ளும், நாட்டிற்கு வெளியேயும் உள்ளன.

வன்முறை எதையும் கொண்டு வராது. அது அராஜகத்திற்கே வழிவகுக்கும். நாட்டில் உள்ள அமைதியின்மை வெளிநாட்டு சக்திகளுக்கு உள்நாட்டிற்கு தலையிடுவதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கும்" என்று பேசியுள்ளார்.

நேபாளம் வன்முறை
நேபாளம் வன்முறை

ஆபரேஷன் சிந்தூர்

கடந்த மே மாதம் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து, "இந்திய அரசு திட்டமிட்டு, மே மாதம் வலுவான பதிலடியை தந்துள்ளது.

நம் நாட்டின் வலுவான தலைமை, வீரமான படைகளைத் தாண்டி, அந்த நேரத்தில், சமூதாயத்தின் பலத்தையும், ஒற்றுமையையும் பார்த்தது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

'ஜி.கே மணியின் மகனுக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவி!' - ராமதாஸ் அறிவிப்பு

பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அணி. மற்றொன்று பாமக தலைவர் அன்புமணி அணி. சமீபத்தில் அன்புமணியை பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.... மேலும் பார்க்க

`கேஸை முடிக்க உதவுங்கள்' உதவி கோரும் மன்னர் புள்ளி டு `புதியவர் சரிப்பட்டு வருவாரா?' | கழுகார்

உதவி கோரும் மன்னர் புள்ளி!“கேஸை முடிக்க உதவுங்கள்...”தமிழகத்தைச் சேர்ந்த இனிஷியல் புள்ளி, நாட்டிலே உயரிய பொறுப்புக்கு சென்றுவிட்டார். அவர் அந்தப் பொறுப்புக்குச் சென்றதால், காலியான அவரின் பழைய இடத்துக்... மேலும் பார்க்க

'சோம்பேறி ஜோ பைடனால் தான் சீனா 'இப்படி' செய்கிறது!' - சீனா மீது கோபத்தில் ட்ரம்ப்; என்ன ஆனது?

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது வரும் நவம்பர் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட வரி இந்தப் பேச்சுவார்த்தையால், கடந்த ஏப்ரல் மாதம் ... மேலும் பார்க்க

'இனி காசாவில் இருக்கும் மக்கள் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள்' - இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை

கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கான 20 பரிந்துரைகளை ஒப்புக்கொண்டார். ஆனால், அதை இன்னும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேல் எச... மேலும் பார்க்க

'இனி கத்தார் நாட்டை தாக்கினால் அது எங்களைத் தாக்கியதுபோல' - அமெரிக்கா திட்டவட்டம்

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, 'ஹமாஸ் தலைமையைத் தாக்குகிறேன்' என்று கத்தாரில் வான்வழித் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய கண்டனத்தை எழுப்பியது. இதற்காக வெள்ளை மாளிகையில் கடந்த த... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: "70 ஆண்டுகள் மறுக்கப்பட்ட உரிமைகள்" - அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த PoK மக்கள்

1ஜம்முவில் உள்ள பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டதாக செய்திதளங்கள் கூறுகின்றன. இ... மேலும் பார்க்க