சர்வதேச சுற்றுலாவுக்கு ஈடாக செல்போனைக் கேட்கும் கும்பல்! இப்படியும் ஒரு மோசடி
மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலமாக பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று(அக். 1) காலை அனுமதிக்கப்பட்டார்.
கார்கே இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அறுவைச் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே கூறியிருந்தார்.
இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, கார்கேவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ள மோடி, கார்கே நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
Spoke to Kharge Ji. Enquired about his health and wished him a speedy recovery.
— Narendra Modi (@narendramodi) October 2, 2025
Praying for his continued well-being and long life.@kharge