குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு
துப்பாக்கிகள் வைத்து ஆயுத, சரஸ்வதி பூஜை கொண்டாடிய புதுச்சேரி போலீசார்
புதுச்சேரி காவல்துறை ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் சார்பில் துப்பாக்கிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு ஆயுத, சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆயுத பூஜை விழா பல்வேறு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், ஆட்டோ நிலையம், மின் லாரி நிறுத்தும் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைகள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கோரிமேட்டில் அமைந்துள்ள ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில் காவலர்கள் சார்பில் ஆயுத, சரஸ்வதி பூஜை விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, ஆயுதப்படை தலைமை அலுவலகம் மாவிலை, வாழை உள்ளிட்ட தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுக்கு பூஜைகள் போடப்பட்டது.
ஆயுதப்படைப்பிரிவு கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில், பூ, பழம், அவல்பொரி கடலை, சுண்டல், இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகள் வைத்து ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆயுதப்படை வீரர்கள் மற்றும் தலைமை காவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.