மொராக்கோவில் வெடித்த ஜென் ஸி போராட்டம்! அரசுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் 2 ...
சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!
அகமதாபாத் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு டெஸ்ட்டில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட்டினை அகமதாபாதில் விளையாடி வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மே.இ.தீ. அணி 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மே.இ.தீ. அணியில் அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் சிராஜ் 4, பும்ரா 3, குல்தீப் 2, வாஷிங்டன் 1 விக்கெட்டும் எடுக்க, ஜடேஜா, நிதீஷ் குமார் யாதவ் விக்கெட் எடுக்காமல் சென்றனர்.