டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?
யு-19 பிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸி.யை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!
19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி தனது முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அசத்தியது.
19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடரைத் தொடர்ந்து தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றுள்ளது.
முதல் இன்னிங்ஸில் விளையாடிய யு-19 ஆஸி. 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து, விளையாடிய, யு-19 இந்திய அணி 428 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக, வேதாந்த் திரிவேதி 140, வைபவ் சூர்யவன்ஷி 113 ரன்கள் குவித்தார்கள்.
இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய யு-19 ஆஸி. அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆர்யான் ஷர்மா 43 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்தியா சார்பில் கிளன் படேல், தீபேஷ் தேவேந்திரன் தலா 3 விக்கெட்டுகளும் அன்மோல்ஜித் சிங், கிஷன் குமார் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்.7ஆம் தேதி மெக்கேவில் தொடங்குகிறது.
இவர்களுடனான ஒருநாள் தொடரை 3-0 என யு-19 இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.