செய்திகள் :

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

post image

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால், அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஆப் ஸ்டோரில் களமிறக்கப்பட்டிருக்கும் அரட்டை செயலி, அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு பக்கம், இந்தியா மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்காவுக்கு எதிராக நாட்டு மக்களின் மனங்கள் மாறி வரும் நிலையில், இந்த அரட்டை செயலிக்கும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பலரும் இந்தியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்கு என்பதை பிரித்துப் பார்க்கவே முடியாது என்ற போதும், இன்றும் இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள்கள் பலவும் அமெரிக்க உள்ளிட்ட வெளிநாட்டுத் தயாரிப்புகளாகவே இருக்கின்றன.

இந்த நிலைமையை மாற்றும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஸோஹோ நிறுவன தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்புவின் சோஹோ டெக் நிறுவனம், கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய அரட்டை செயலி மெல்ல மேம்படுத்தப்பட்டு, இன்று வாட்ஸ் ஆப் என்ற முன்னணி சமூக ஊடகத்துக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

டிஜிட்டல் பாதுகாப்பு, தகவல் திருட்டுகளுக்கு பாய் பாய் சொல்லும் வகையில், இது நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் இதன் பயனர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்து தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

இதற்கு, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், வாட்ஸ்ஆப் செயலிக்கு மாறாக, உள்ளூர் செயலிகளுக்கு மக்கள் மாற வேண்டும் என்றும், அரட்டை செயலியை பயன்படுத்துங்கள் என்றும் கூறியிருந்தார்.

இது பரவலாக கவனம் பெற்று, இந்திய ஆப் ஸ்டோரில் வாட்ஸ்ஆப் பின்னுக்குத் தள்ளப்பட்டு அரட்டை முதலிடம் பிடித்து சாதனைப் படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சர்வதேச எல்லையான ‘சர் க்ரீக்’ பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் உள்கட்டமைப்பு அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்ப... மேலும் பார்க்க

ஸுபின் கர்க் மரணத்தில் திடீர் திருப்பம்! ஸ்கூபா டைவிங் போது இறக்கவில்லை!!

அசாம் இசைக் கலைஞர் ஸுபின் கர்க் கடந்த மாதம் சிங்கப்பூரில் மரணமடைந்த நிலையில், அவர் ஸ்கூபா டைவின் செய்தபோது மரணமடையவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் ம... மேலும் பார்க்க

மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடி!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் உடல்நலம் குறித்து தொலைபேசி மூலமாக பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் ம... மேலும் பார்க்க

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

மகாத்மா காந்தியின் பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் காந்தியின் பிறந்தநாளான இன்று ’காந்தி ஜெயந்தி’ விழா கொண்டாடப்பட்டு வருகின்றத... மேலும் பார்க்க

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த பங்கேற்பு!

நாக்பூரில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு நிறைவு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டுள்ளார்.கடந்த 1925 ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் அமைப்ப... மேலும் பார்க்க

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதையடுத்... மேலும் பார்க்க