காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!
தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்கரியும் உடனிருந்தார்.
தொடர்ந்து, தில்லியில் உள்ள விஜய் காட் சென்ற மோடி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.