குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்...
மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்
மத்தியப் பிரதேசத்தில் பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்களை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தின் உன்ஹெல் நாகேஷ்வர் நகரில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் செவ்வாய்க்கிழமை குழந்தைகள் பிஸ்கட் வாங்கியுள்ளனர். இந்த பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் சேர்த்து பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்களையும் கடைக்காரர் கொடுத்திருக்கிறார்.
இதனைக் கண்ட குழந்தைகளின் பெற்றோர் உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார் பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு
விசாரணையில் குழந்தைகள் வாங்கிய சில பலூன்களை நீரஜ் சிங்காலும் தீரஜ் சிங்காலும் விற்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் மகாராஷ்டிரம், தில்லி மற்றும் வேறு இடங்களிலிருந்து பொருள்களைப் பெற்றதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பாக்கெட்டுகளைத் திறந்து பார்த்தபோது பலூனில் பாகிஸ்தான் கொடியும், "ஜஷ்ன்-இ-ஆசாதி பாகிஸ்தான் - ஆகஸ்ட் 14" என்று உருது மொழியில் எழுதப்பட்ட வாசகமும் இடம்பெற்றிருந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.