குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்...
உ.பி.: 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே பலியான 75 வயது முதியவர்!
உத்தரப் பிரதேசத்தில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த மறுநாளே முதியவர் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தில் வசித்து வந்தவர் சங்ருராம்(75). இவரின் மனைவி கடந்த ஆண்டு பலியான நிலையில் அவர் தனியாக வசித்து வந்திருக்கிறார். குழந்தை இல்லாததால் விவசாயத்தில் கிடைக்கும் வருவாயில் வாழ்க்கை நடத்தியுள்ளார். இந்நிலையில் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஆசை வந்திருக்கிறது. ஆனால் மறுமணம் செய்ய வேண்டாம் என்று அவருக்கு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், அதனையும் மீறி சங்ருராம் மறுமணம் செய்துள்ளார். தம்பதியினர் இருவரும் திருமணத்தை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் பதிவு செய்து, பின்னர் உள்ளூர் கோயிலில் பாரம்பரிய சடங்குகளைச் செய்தனர். சங்ருராமை மணந்த மன்பவதிக்கும் இது இரண்டாவது திருமணம். மன்பவதிக்கு ஏற்கெனவே இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். குழந்தைகளை தான் பார்த்துக்கொள்வதாகவும், வீட்டுப் பொறுப்பை மன்பவதி ஏற்க வேண்டும் என்றும் சங்ருராம் தெரிவித்திருக்கிறார்.
செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி
பிறகு திருமணம் நடைபெற்ற இரவு அன்று இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். ஆனால் காலையில், சங்ருராமின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முதியவரின் திடீர் மரணம் கிராமத்தில் ஊகங்களைத் கிளப்பியுள்ளது. தில்லியில் வசிக்கும் சங்ருராமின் மருமகன்கள் இறுதிச் சடங்குகளை நிறுத்தியுள்ளனர்.
தாங்கள் திரும்பும் வரை இறுதிச் சடங்குகள் நடக்கக்கூடாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே போலீஸார் முறையான விசாரணையைத் தொடங்குவார்களா அல்லது உடற்கூராய்வுக்கு உத்தரவிடுவார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சங்ருராமின் இறப்பிற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.