பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கராச்சியில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தான் கராச்சியில் புதன்கிழமை காலை 9.34 மணியளிவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கமானது மாலிர் பகுதிக்கு வடமேற்கே 7 கிமீ தொலைவில் நிலப்பரப்பில் இருந்து பூமிக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல இடங்களில் நன்கு உணரப்பட்டதால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் கூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, செப்டம்பர் 16 ஆம் தேதி 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.