செய்திகள் :

எனக்கு நோபல் பரிசு கொடுக்கவில்லை எனில் அது அமெரிக்காவுக்கே அவமானம்! - டிரம்ப்

post image

உலகில் 8 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது அமெரிக்காவையே அவமதிப்பதாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் உள்பட உலகில் பல்வேறு போர்களை நிறுத்தியதாகவும் அதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ராணுவ அதிகாரிகள் முன்பு பேசிய டிரம்ப்,

இதுவரை 7 போர்களை நான் நிறுத்தியிருக்கிறேன். காஸா - இஸ்ரேல் இடையேயான போரை நிறுத்த திட்டத்தை வகுத்திருக்கிறேன். இந்த போர் நிறுத்தப்பட்டால் நான் நிறுத்திய 8 ஆவது போர் இதுவாகும்.

உலகில் 8 சர்வதேச போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவார்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் அப்படி எதுவுமே செய்யாத ஒருவருக்குத்தான் கொடுப்பார்கள். எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காவிட்டால் அது தனது நாட்டிற்கு அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று கூறினார்.

காசா அமைதித் திட்டத்தை டிரம்ப் அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.

இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Big insult to America if Nobel Peace Prize is not awarded to me: US President Trump

அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்! என்னென்ன துறைகள் இயங்கும்?

அமெரிக்க நாடாளுமன்றத்தில், அரசு நிர்வாக செலவீனங்களுக்கு ஒதுக்கும் நிதி தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாததால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியிருக்கிறது.அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களைத் த... மேலும் பார்க்க

கத்தாரை தாக்கினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்! டிரம்ப்

கத்தாரை பிற நாடுகள் தாக்கினால், அது அமெரிக்கா மீதான தாக்குதலாக கருதப்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் வான்வழித... மேலும் பார்க்க

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

அமெரிக்காவின் விவசாயிகள் நலன்கருதி, சீனாவை சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.சீனா மீதான வரிவிதிப்பால், அமெரிக்காவில் சோயா பீன்ஸை கொள்முதல் செய்வதை சீனா நிறுத்தியது. இ... மேலும் பார்க்க

62 வயது டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் க்ரூஸும், நடிகை அனா டி அர்மாஸுக்கும் விண்வெளியில் திருமணம் நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது.ஹாலிவுட்டில் முன்னணி நடிகராகத் திகழும் டாம் க்ரூஸ் (63) மற்றும் நடிகை அனா ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர்.பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி கூட்டு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாஸ்பேட் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவாவின், அபோடாபாத் மாவட்டத்தில், பாஸ்பேட் சுரங்கம் ஒன்று இயங்கி வந்... மேலும் பார்க்க