செய்திகள் :

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலை! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி விழா இன்று(அக். 2) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள்!

மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர்.

நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்!

இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி!" என்று குறிப்பிட்டுள்ளார்.

TN Chief minister MK stalin says that PM modi releasing RSS commemorative coin is a tragedy

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

தவெக விஜய்க்கும், திமுகவுக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் வலுப்பெற்றிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு... மேலும் பார்க்க

பாஜகவை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி அதன்பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன்

சென்னை: பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லக்கூடிய தவெக தலைவர் விஜய், எப்படி பாஜக பிடியில் இருப்பார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின்... மேலும் பார்க்க

கரூர் பலி: முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? - ராமதாஸ்

கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எப்படி காரணமாக இருக்க முடியும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ் கரூர் நெரிசல் பலி குறித்த கேள்விகளுக்கு பதிலளி... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்குப்பதிய அரசுக்கு அச்சமா? திருமாவளவன்

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தமிழக அரசு அஞ்சுகிறதா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், விஜய்யை பாஜக இயக்குவதாகவும் அவரைக் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் அவர்... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு! எங்கே? எப்படி?

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேர்மை விழிப்புணர்வு நாளைக் கொண்டாடும் வகையில், 26வது ஆண்டாக பாபநாசத்தில் இன்று ஒரு நாள் ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேர்மை விழிப்புணர்வு நா... மேலும் பார்க்க