செய்திகள் :

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு! எங்கே? எப்படி?

post image

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேர்மை விழிப்புணர்வு நாளைக் கொண்டாடும் வகையில், 26வது ஆண்டாக பாபநாசத்தில் இன்று ஒரு நாள் ஆளில்லா கடை திறக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேர்மை விழிப்புணர்வு நாளை போற்றும் வகையில், பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில், பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் 26-ஆம் ஆண்டாக, கடையில் பொருள்கள் விற்பனை செய்வதற்கு, விற்பனையாளர்கள் யாரும் இல்லாமல் ஆளில்லா கடை திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது.

மகாத்மா காந்தியின் நேர்மையைப் போற்றும் வகையில் உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த சுதந்திர இந்தியாவை உருவாக்க காந்தி கண்ட கனவை நினைவாக்கும் விதமாக அவர் பிறந்தநாளை நேர்மை விழிப்புணர்வு நாளாக உருவாக்கி விற்பனையாளர்கள் இல்லாத (ஆளில்லாத) கடையை வருடம் ஒருமுறை என, தொடர்ந்து 26-ஆண்டுகளாக பாபநாசம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.

இந்த கடையை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான சாக்கோட்டை அன்பழகன் திறந்து வைத்தார்.

இந்த ஆள் இல்லாத கடையில் வைக்கப்பட்டிருந்த பொருள்களில் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்ட பொதுமக்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட பொருள்களுக்கு உண்டான பணத்தை கடையில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் போட்டுச் சென்றனர்.

மேலும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருள்கள், புத்தகங்கள் போன்ற ஏராளமான பொருள்கள் விற்பனை செய்வதற்கு ஆளில்லாத கடையில் வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

To celebrate Honesty Awareness Day, an unmanned shop has been opened in Papanasam for the 26th year today, on the occasion of Gandhi Jayanti.

இதையும் படிக்க... டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

பாஜகவை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி அதன்பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன்

சென்னை: பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லக்கூடிய தவெக தலைவர் விஜய், எப்படி பாஜக பிடியில் இருப்பார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின்... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலை! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அஞ்சல் தலை, நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி... மேலும் பார்க்க

கரூர் பலி: முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? - ராமதாஸ்

கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எப்படி காரணமாக இருக்க முடியும்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ் கரூர் நெரிசல் பலி குறித்த கேள்விகளுக்கு பதிலளி... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்குப்பதிய அரசுக்கு அச்சமா? திருமாவளவன்

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தமிழக அரசு அஞ்சுகிறதா என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், விஜய்யை பாஜக இயக்குவதாகவும் அவரைக் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் அவர்... மேலும் பார்க்க

காந்தி பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.மகாத்மா காந்தியின் பிறந்த நாளான காந்தி ஜெயந்தி விழா இன்று(அக... மேலும் பார்க்க

பாமக இளைஞரணி தலைவராக தமிழ்குமரன் நியமனம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம். தமிழ்குமரனை நியமித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.பாமகவில் ஏற்பட்ட பிளவால் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் தனித்தனியாக அவர்களின்... மேலும் பார்க்க