`பெரிய மன உளைச்சல்ல இருக்கேன்; திட்டறவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல!' - பிக்பாஸ் அசீம்
கரூர் விவகாரம் குறித்து நடிகரும் பிக்பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னருமான அசீம் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில்
‘’வயதானவங்களும், கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் வந்து நெரிசல்ல சிக்கி உயிரை விட்டிருக்காங்க. அந்தத் துயரம் குறித்து வருத்தத்தைத் தெரிவிக்கக் கூட விஜய் சார்க்கு நாலு நாள் ஆகுது. இந்த தாமதமே ரொம்ப தப்பு.
ஒரு பிரச்னைனு வந்ததும் ஓடி ஒளிஞ்சிகிட்டு அது பத்திப் பேசவே நாள் கணக்குல அவகாசம் எடுத்துக்கிற நீங்க கனவு காண்கிற படி ஒரு வேளை முதல்வர் ஆகிட்டா எந்தவொரு விஷயத்தையும் எப்படி ஹேண்டில் செய்வீங்க? உங்களுடைய இந்த மாதிரியான நடவடிக்கை திரையில் மட்டுந்தான் நீங்க ஹீரோவானு கேக்க வைக்குது.
அதேபோல் ரஜினி, கமல் சாரைத் தாண்டி இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிச்சோ அல்லது கண்டனம் தெரிவிச்சோ இன்னைகு உச்ச நட்சத்திரங்களா இருக்கிற ஒருத்தர் கூட வீடியோவோ ட்வீட்டோ போடலை அது ஏன்னு புரியலை.

தங்களுடைய படங்கள் ரிலீசாகுறப்ப தங்களுடைய ரசிகர்களைத் தாண்டி விஜய் ரசிகர்களும் படத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறாங்க போல. அந்தப் பயத்துலதான் யாரும் கருத்து சொல்லலைனு நான் நினைக்கிறேன். இதுவும் ரொம்பவே ஜீரணிக்க முடியலைங்க. நானுமே இப்ப படம் நடிச்சிட்டிருக்கேன். நாளைக்கு என் படமும் ரிலீசாகும். என்ன ஆனாலும் ஆகிட்டுப் போகட்டும். ஆனா நடந்த சம்பவம் எனக்கு பெரிய மன உளைச்சலைத் தந்தது. அதனாலேயே இப்படியொரு வீடியோ போடணும்னு நினைச்சேன்.
வழக்கம் போல கமெண்ட்ல வந்து திட்டறவங்க திட்டத்தான் போறாங்க. அவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல. போற்றுவார் போற்றட்டும்னு நினைச்சுட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான்’ என ரொம்பவே கொதிப்புடன் பேசியிருக்கிறார்.
அசீம் ஆரம்பத்தில் திமுக ஆதரவாளரெனச் சொல்லப்பட்டது. பிறகு சீமானுடன் நெருக்கம் காட்டி வந்தார். இந்நிலையில், தற்போது அரசியல் களத்தில் கனன்று கொண்டிருக்கும் கரூர் விவகாரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.