திருவண்ணாமலையை உலுக்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 2 காவலர்களும் ...
இப்படியொரு மேக்கிங்கா? பாராட்டுகளைப் பெறும் காந்தாரா சாப்டர் - 1!
நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
காந்தாரா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் - 1 என்கிற திரைப்படத்தை எடுத்துள்ளார். மன்னர் காலக்கதையாக உருவான இது இன்று உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
பழங்குடிகள் - மன்னர் வாரிசுகளுக்கு இடையேயான கதையில் கடவுள், தொன்மம் உள்ளிட்ட விஷயங்களைப் பதிவு செய்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
கதை கொஞ்சம் சோர்வை அளித்தாலும் உருவாக்க ரீதியாக மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதால், அனைத்து மொழிகளிலும் காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.
முக்கியமாக, ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத் உள்ளிட்டோர் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.
இதனால், இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வசூலை அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நெருப்பில் குளிக்கும் தெய்வம்... காந்தாரா சாப்டர் - 1 திரை விமர்சனம்!