செய்திகள் :

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

post image

உத்தரப் பிரதேசத்தில், தசரா பண்டிகையை முன்னிட்டு பரேலி பிரிவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 48 மணிநேரத்துக்கு இணைய சேவைகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

பரேலி பிரிவில் உள்ள 4 மாவட்டங்களில், தசரா பண்டிகையை முன்னிட்டு, மதக்கலவரம் ஏற்படாமல் தடுக்க, இன்று (அக். 2) மாலை 3 மணி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 3 மணி வரை சுமார் 48 மணிநேரத்துக்கு இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் துண்டிக்கப்படுவதாக, உத்தரப் பிரதேசத்தின் உள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி, உள் துறை செயலாளர் கௌரவ் தயாள் வெளியிட்டுள்ள உத்தரவில், முகப்புத்தகம், யூடியூப், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகச் செயலிகள் மூலம் வதந்திகள் பரவி மதக்கலவரங்கள்உருவாகக் கூடும் என்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பரேலி பிரிவில் உள்ள மாவட்டங்களின் முக்கிய பகுதிகள் மற்றும் தெருக்கள் முழுவதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு; பாதுகாப்புப் படையினர் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, செப். 26 ஆம் தேதி கொட்வாலி பகுதியில் உள்ள மசூதியின் அருகில் திரண்ட இஸ்லாமியர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

In Uttar Pradesh, internet services have been temporarily suspended for the next 48 hours in Bareilly division as a precautionary measure ahead of the Dussehra festival.

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

பிரபல பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அவரது மேலாளர் மற்றும் விழா ஏற்பாட்டாளர் மீது அசாம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல அசாமிய ப... மேலும் பார்க்க

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

ஜனநாயகம் மீதான தாக்குதல் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் என கொலம்பியாவில் நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி கொலம்பியாவில்... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு: ஆந்திர முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து!

ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டு நிறைவு செய்துள்ளதற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்... மேலும் பார்க்க

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சர்வதேச எல்லையான ‘சர் க்ரீக்’ பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் உள்கட்டமைப்பு அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்ப... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால், அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஆப் ஸ்டோரில் களமிறக்கப்பட்டிருக்கும் அரட்டை செயலி, அதிகம் பேரால் பதிவிறக்கம் செய்... மேலும் பார்க்க

ஸுபின் கர்க் மரணத்தில் திடீர் திருப்பம்! ஸ்கூபா டைவிங் போது இறக்கவில்லை!!

அசாம் இசைக் கலைஞர் ஸுபின் கர்க் கடந்த மாதம் சிங்கப்பூரில் மரணமடைந்த நிலையில், அவர் ஸ்கூபா டைவின் செய்தபோது மரணமடையவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அஸ்ஸாமி, ஹிந்தி உள்பட 40 மொழிகளில் ம... மேலும் பார்க்க