செய்திகள் :

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திருத்தேர் வைபவம்!

post image

மதுரை: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்றது திருத்தேர் வைபவம். பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர்.

மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் புரட்டாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேர் வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று "கோவிந்தா" என்ற கோஷம் முழக்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலின் இணைப்பு கோவிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான புரட்டாசி மாத பிரமோற்சவ பெருந்திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 05ம் தேதி வரை நடைபெறுகிறது.

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் காலையில் பெருமாள் தாயார்களுடன் பல்வேறு அலங்காரத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரமோற்சவ பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேர் வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெருமாள் எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து திருத்தேர் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

திருத்தேர் வலம் வந்த பகுதிகளில் எல்லாம் பக்தர்கள் கோவிந்தா எனும் கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விழாக்களில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெப்ப உற்சவம் வரும் 04 -ம் தேதி காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற உள்ள நிலையில், வரும் O5-ம் ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில், தொடர்களின் ஒளிபரப்பு நே... மேலும் பார்க்க

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

நடிகர் அஜித், நரேன் கார்த்திகேயன் இருவரும் இணைந்து கார் பந்தயத்தில் பங்கேற்கின்றனர். அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் துபையில் நடந்த கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு 3 ஆம் இடம... மேலும் பார்க்க

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொண்டார். இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அறை எண் 305-ல் கடவுள். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், எம். எஸ். பாஸ்கர்,... மேலும் பார்க்க

அதிவேகமாக 50 கோல்கள் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸி சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு!

மான்செஸ்டர் சிட்டி அணியின் கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் (25 வயது) மெஸ்ஸியின் சாதனைக்கு மிக அருகில் இருக்கிறார். குறைவான போட்டிகளில் வேகமாக கோல் அடிக்கும் பட்டியலில் எர்லிங் ஹாலண்ட் முன்னேறி வருகிறா... மேலும் பார்க்க

குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

டேஹ்ராடூன்: குளிர்காலத்தை முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 25ம் தேதி மூடப்படும் என்று ஜோதிட நிபுணர்கள் கணித்து தேதியை அறிவித்துள்ளனர்.சார்தாம் என்று அழைக்கப்படும் நான்கு புகழ்பெற்ற... மேலும் பார்க்க