அக்.26 முதல்..! 5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை!
மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில், தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் மகாநதி. இத்தொடர் 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
தந்தையை இழந்த 4 சகோதரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்காக தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ள நிலையில், வரும் அக். 6 முதல் மகாநதி தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
அக். 6 முதல் தொடர்களின் புதிய நேரங்கள்
பூங்காற்றுத் திரும்புமா - மாலை 6 மணி
மகாநதி - மாலை 6.30 மணி
சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் - இரவு 7 மணி
சின்ன மருமகள் தொடர் - இரவு 7.30 மணி
பாண்டியன் ஸ்டோர்ஸ் - இரவு 8 மணி
அய்யனார் துணை - இரவு 8.30 மணி
சிறகடிக்க ஆசை தொடர் - இரவு 9 மணி
இதையும் படிக்க: கரூர் பலி: முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? - ராமதாஸ்