செய்திகள் :

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

post image

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தருமபுரியில் பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், “ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம் என்றால் பாதுகாப்பு கொடுப்பது காவல் துறையினர் கைகளில்தான் உள்ளது. தமிழகக் காவல் துறை முதல்வரின் நேரடிக் கட்டுப்பாடில் உள்ளது.

அவ்வாறு பாதுகாப்பு கொடுத்திருந்தால் கரூரில் 41 பேரை இழந்திருக்க மாட்டோம். கரூர் சம்பவம் தமிழகத்துக்குதான் தலைகுனிவு. துணை முதல்வர் கரூருக்கு வந்து பார்த்துவிட்டு உடனே மீண்டும் சுற்றுலாவுக்கு சென்றுவிட்டார்;

கரூரில் பெரிய துயரச் சம்பவம் நடந்த நிலையில் துணை முதல்வர் எங்கே போனார்? கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார்; அவர் கண்ணில் பயம் தெரிகிறது” என்றார்.

Karur incident is a disgrace to Tamil Nadu; the government should take responsibility! - EPS

காந்தி சிலைக்கு காவித்துண்டு: புதிய சர்ச்சை!

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகளுக்கு அரசியல் கட்சிகள்,... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 2) மாலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 87,600-க்கு விற்பனையாகிறது.இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23... மேலும் பார்க்க

மத்திய அரசு நிதி விடுவிப்பு! இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை தொடங்கப்படும்!

மத்திய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009-இன்படி (RTE) மாணவர் சேர்க்கை தொடங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது குறித்த... மேலும் பார்க்க

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

தவெக விஜய்க்கும், திமுகவுக்கும் இடையே ரகசிய தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்கள் கனமழை தொடரும்! சென்னை, புறநகருக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் வலுப்பெற்றிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு... மேலும் பார்க்க

பாஜகவை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி அதன்பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன்

சென்னை: பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லக்கூடிய தவெக தலைவர் விஜய், எப்படி பாஜக பிடியில் இருப்பார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின்... மேலும் பார்க்க