RSSக்கு புகழாரம் - ஆளும் தி.மு.க அரசு மீது கடும் விமர்சனம்; ஆளுநர் ஆர்.என்.ரவி அ...
தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 2) மாலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 87,600-க்கு விற்பனையாகிறது.
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 23-ஆம் தேதி தங்கம் விலை சவரன் முதல் முறையாக ரூ.85,120-க்கு விற்பனையானது.
தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரன் ரூ.86,160-க்கு விற்பனையானது.
அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்து ரூ.86,880-க்கும் விற்பனையானது. புதன்கிழமையும் இரு முறை உயர்ந்து சவரன் ரூ. 87,600 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று(அக். 2) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து, ரூ. 87,040 -க்கும், கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ. 10,880 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 87,600 -க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 10,950-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க: ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்!