செய்திகள் :

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜின் வரிகளில் புதிய பாடல்!

post image

நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள “பைசன் காளமாடன்” திரைப்படத்தின் தென்னாடு பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம், பைசன் காளமாடன். இப்படத்துக்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

தென் மாவட்டங்களில் வாழும் கபடி வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பா. இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ மற்றும் ‘அப்லாஸ் என்டர்டெயின்மென்ட்’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

ஏற்கெனவே, வெளியான இப்படத்தின் ‘தீக்கொளுத்தி’, ‘சீனிக்கல்லு’ ஆகிய பாடல்களை இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். மேலும், ‘றெக்க றெக்க’ எனும் மற்றொரு பாடலை மாரி செல்வராஜ் மற்றும் பாடகர் அறிவு ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்தப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதியுள்ள ‘தென்னாடு’ எனும் புதிய பாடலை படக்குழுவினர் இன்று (அக். 2) வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

The song "Thennadu" from the movie "Bison Kaalamadan" starring actor Dhruv Vikram has been released.

துடரும் இயக்குநரின் புதிய படம் ஆபரேஷன் கம்போடியா!

நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் - இயக்குநர் தருண் மூர்த்தி ஆகியோரது கூட்டணியில் உருவாகும் புதிய படத்துக்கு ‘ஆபரேஷன் கம்போடியா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் மோகன் லாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெ... மேலும் பார்க்க

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் திருத்தேர் வைபவம்!

மதுரை: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெற்றது திருத்தேர் வைபவம். பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி வழிபாடு செய்தனர்.மதுரை தல்லாகுளம் அருள்மிக... மேலும் பார்க்க

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றம்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில், தொடர்களின் ஒளிபரப்பு நே... மேலும் பார்க்க

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

நடிகர் அஜித், நரேன் கார்த்திகேயன் இருவரும் இணைந்து கார் பந்தயத்தில் பங்கேற்கின்றனர். அஜித் குமார் ரேஸிங் அணி சில மாதங்களுக்கு முன் துபையில் நடந்த கார் பந்தயத்தில் முதல்முறையாகக் கலந்துகொண்டு 3 ஆம் இடம... மேலும் பார்க்க

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொண்டார். இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அறை எண் 305-ல் கடவுள். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், எம். எஸ். பாஸ்கர்,... மேலும் பார்க்க