செய்திகள் :

திருவண்ணாமலையை உலுக்கிய இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான 2 காவலர்களும் `டிஸ்மிஸ்’!

post image

ந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் தனது வளர்ப்புத் தாயுடன் கடந்த 29-9-2025 அன்று இரவு காளஹஸ்தியில் இருந்து வாழைத்தார் ஏற்றிவந்த மினி வேனில் திருவண்ணாமலை மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறார். காய்கறி மண்டியில் லோடு இறக்கியப் பிறகு, மறுநாள் அதிகாலை 2.30 மணியளவில் மீண்டும் ஆந்திராவை நோக்கி புறப்பட்டிருக்கின்றனர்.

புறநகர் பகுதியில் சென்று காத்திருந்தபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலைய காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இருவரும் சீருடையில் சென்று இருப் பெண்களிடமும் விசாரித்திருக்கின்றனர். ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து, துணைக்கு வேறு யாரும் வராததையும் உறுதி செய்துகொண்ட சபல புத்தி காக்கிகள், இருப் பெண்களையும் மிரட்டி தங்களுடன் அழைத்துசென்றிருக்கின்றனர்.

டிஸ்மிஸ் ஆன 2 காவலர்கள்

ஆள் நடமாட்டம் இல்லாத ஏரிக்கரை பகுதிக்குச் சென்றவுடன் இளம்பெண்ணை இருக்காவலர்களும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். தனது கண்ணெதிரிலேயே, தனது வளர்ப்பு மகள் காமவெறிப் பிடித்த காக்கிகளால் கடித்து குதறப்படுவதை தடுக்க முடியாமல் கதறியிருக்கிறார் அந்தத் தாய். இந்த விவகாரம் வெளியில் தெரியவந்ததையடுத்து, காமுகக் காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் இருவரும் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

துறை ரீதியாகவும் உடனடியாக இருக்காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், விசாரணையின்போது இருக்காவலர்களும் பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்றைய தினம் பணியில் இருந்தும் நிரந்தரமாக (டிஸ்மிஸ்) நீக்கப்பட்டிருக்கின்றனர்.

பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்; விகடன் புகாரால் அதிரடி கைது! | முழு விவரம்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், "பெண் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதால் பெற்றோர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் செய்து பார்க்கும் உரிம... மேலும் பார்க்க

தேனி: அரசுப் பள்ளியில் புத்தகங்கள் திருட்டு; அதிர்ச்சி வீடியோ... ஆசிரியர் பணியிடை நீக்கம்!

தேனி, பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தகங்களை ஆசிரியர்களே யாருக்கும் தெரியாமல் மர்ம நபர்களுக்கு வண்டிகளில் ஏற்றி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இத... மேலும் பார்க்க

தாய் கொலை; 19 வயது வாலிபருடன் கைதான 47 வயது மகள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காயாம்பு கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (77). தேவகோட்டை மருத்துவமனையில் மகப்பேறு உதவியாளராக பணியாற்றி வந்த இவர், பணி ஓய்வுக்குப் பின் சாயல்குடியில் வசிக்கும் மூத்த... மேலும் பார்க்க

சென்னை: கணவரைக் கொன்று விட்டுப் பொய் சொன்ன மனைவி; இறப்பதற்கு முன் கணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார். இவர் தன்னுடைய முதல் மனைவியைப் பிரிந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் பிங்கி என்பவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். பின்னர் பிழைப்பு... மேலும் பார்க்க

'போலி விளம்பரம், பகுதிநேர வேலை, கை நிறைய காசு, லட்சங்கள் அபேஸ்' - சைபர் கொள்ளையர் சிக்கியது எப்படி?

பகுதிநேர வேலை, அதிக வருமானம் என, சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், வாட்ஸ் அப்பில் வரும் குறுஞ்செய்திகள், ஆன்லைன் தங்க வர்த்தகம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனப் பல்... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: கர்ப்பத்தைக் கலைக்க சொன்ன காதலன்; கழுத்தை அறுத்துக் கொன்ற காதலி; விசாரணையில் பகீர் தகவல்

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகில் உள்ள கோனி என்ற கிராமத்தில் வசிக்கும் மைனர் பெண் ராய்ப்பூரில் வசிக்கும் மொகமத் சதாம் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார்.இதில் மைனர் பெண் கர்ப்பமானார். பீகாரைச் சேர்ந... மேலும் பார்க்க