செய்திகள் :

தேனி: அரசுப் பள்ளியில் புத்தகங்கள் திருட்டு; அதிர்ச்சி வீடியோ... ஆசிரியர் பணியிடை நீக்கம்!

post image

தேனி, பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தகங்களை ஆசிரியர்களே யாருக்கும் தெரியாமல் மர்ம நபர்களுக்கு வண்டிகளில் ஏற்றி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய மாணவர்கள், “ சில்வார்பட்டி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாலை வேளைகளில் கால்பந்து விளையாடுவோம். அப்படி மாலையில் வந்த பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் பியூன் விஜயன் இருவரும் எங்களை இன்று மட்டும் விளையாட வேண்டாம் எனச் சொல்லி கிளம்ப சொன்னார்கள்.

எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காகப் மறைந்திருந்தோம். அப்போது ஒரு டெம்போ மற்றும் இரண்டு பைக்குகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பள்ளிக்குள் வந்தனர்.

புத்தகங்களை எடுத்து சென்ற டெம்போ
புத்தகங்களை எடுத்து சென்ற டெம்போ

பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் பாரதிராஜா அவர்களிடம் பேசி, பள்ளியில் உள்ள புத்தக பண்டல்களை எடுத்து டெம்போவிற்குள் ஏற்றினார். உள்ளே நடந்ததை நாங்கள் மறைந்திருந்து வீடியோ எடுத்தோம். நாங்கள் வீடியோ எடுத்ததைப் பார்த்த அந்த ஆசிரியரும் டெம்போவில் வந்திருந்தவர்களும் உடனே வண்டியை எடுத்துக்கொண்டு அவசரமாகச் சென்று விட்டனர்.

மேலும் நாங்கள் எடுத்த வீடியோவை நீக்குமாறும், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும், இது பற்றி வெளியே சொல்லாமல் இருக்க எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் சொல்லி ஊர்க்காரர் ஒருவர் எங்களுடன் பேசினார்.

பள்ளி புத்தகங்களை ஏற்றும் வீடியோ
பள்ளி புத்தகங்களை ஏற்றும் வீடியோ

நாங்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்" என்றனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆசிரியர் பாரதிராஜா மற்றும் தூய்மை பணியாளர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு இருக்கின்றனர்.

தாய் கொலை; 19 வயது வாலிபருடன் கைதான 47 வயது மகள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காயாம்பு கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (77). தேவகோட்டை மருத்துவமனையில் மகப்பேறு உதவியாளராக பணியாற்றி வந்த இவர், பணி ஓய்வுக்குப் பின் சாயல்குடியில் வசிக்கும் மூத்த... மேலும் பார்க்க

சென்னை: கணவரைக் கொன்று விட்டுப் பொய் சொன்ன மனைவி; இறப்பதற்கு முன் கணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார். இவர் தன்னுடைய முதல் மனைவியைப் பிரிந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் பிங்கி என்பவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். பின்னர் பிழைப்பு... மேலும் பார்க்க

'போலி விளம்பரம், பகுதிநேர வேலை, கை நிறைய காசு, லட்சங்கள் அபேஸ்' - சைபர் கொள்ளையர் சிக்கியது எப்படி?

பகுதிநேர வேலை, அதிக வருமானம் என, சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், வாட்ஸ் அப்பில் வரும் குறுஞ்செய்திகள், ஆன்லைன் தங்க வர்த்தகம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனப் பல்... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: கர்ப்பத்தைக் கலைக்க சொன்ன காதலன்; கழுத்தை அறுத்துக் கொன்ற காதலி; விசாரணையில் பகீர் தகவல்

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகில் உள்ள கோனி என்ற கிராமத்தில் வசிக்கும் மைனர் பெண் ராய்ப்பூரில் வசிக்கும் மொகமத் சதாம் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார்.இதில் மைனர் பெண் கர்ப்பமானார். பீகாரைச் சேர்ந... மேலும் பார்க்க

நீலகிரி: வாழிடம் இழந்த யானைகள் தாக்குதல் - ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்த சோகம்

நீலகிரி மலையில் வாழிடங்களையும் வலசைப்பாதைகளையும் இழந்து தவிக்கும் யானைகள் போக்கிடம் தெரியாமல் தடம் மாறி வருகின்றன. உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்ற... மேலும் பார்க்க

திருமணத்துக்கு முன் தனிமை; பணத்தைச் சுருட்டியதும் எஸ்கேப் - யார் இந்த மன்மதன் சூர்யா?

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு ராணிக்கு வரன் தேடி அவரின் பெற்றோர் திருமண த... மேலும் பார்க்க