Kantara: ``விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன!" - காந்தாரா குறித்து நெ...
Parthiban: ``அதனால் நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் எனச் சொல்வார்கள்" - நடிகர் பார்த்திபன்
கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று `மெளனம்' படத்தின் விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் கரூர் சம்பவம் குறித்தும், நேற்று வெளியான இட்லி கடை' திரைப்படம் குறித்தும், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தும் பேசியிருக்கிறார்.
பார்த்திபன் பேசுகையில், "41 மரணங்கள் நிகழும்போதும் மெளனத்தைக் கடைபிடிக்கும் மோசமான சூழலில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. இதில் எது சரி, தவறு என ஆராய்வதற்கு வேறு ஒரு குழு இருக்கிறது.
மேலும், இதுபோன்ற பலி ஏற்படாமல் இருப்பதற்கு அலட்சியம், அஜாக்கிரதை, சதி, சூழ்ச்சி என எதுவாக இருந்தாலும் அந்தப் பிரச்னைக்குள் போகாமல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மேலும் பாதிப்புகள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாது.

காந்தி ஜெயந்தியான இன்று காந்தியை வேண்டிக் கொள்வோம். நேற்று வெளியான `இட்லி கடை' படத்தில் நான் நடித்திருப்பது பெருமை.
`இட்லி கடை' அகிம்சையைப் பற்றி பேசுகிற ஒரு திரைப்படம். இன்றைய நாட்களில் வன்முறையை வைத்து படமெடுத்தால் அது பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும். அப்படியான காலத்தில் அகிம்சையை நம்பி படம் எடுத்திருக்கும் தனுஷுக்கு பாராட்டுகள்.
மகாத்மா காந்தியே, இன்றைய நாளில் படமெடுக்க வந்தால் வன்முறையை வைத்துதான் படமெடுப்பார். இப்படியான காலத்தில் ஒரு நல்ல படமெடுக்க வந்திருக்கும் இந்த `மெளனம்' படக்குழுவுக்கு என்னுடைய பாராட்டுகள்.
சினிமாவிலிருக்கும் அனைவருக்கும் சமூகப் பொறுப்புணர்வு முக்கியம். அரசியலுக்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. மனதில் வீராப்பு, நல் எண்ணம் கொண்டவர்கள் மட்டும் இங்கு அரசியல் செய்துவிட முடியாது. அரசியல் என்பது வேறு களம், அது யாரும் புரியாது என்றே புதைத்து வைத்திருந்தார்கள்.
அப்படியான நேரத்தில்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வீரியமாக அரசியலுக்கு வந்தார். யார் அரசியலுக்குள் வந்தாலும் நான் அவர்களை வரவேற்கிறேன். நல்லது தானே!
இதனால் நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் எனச் சொல்வார்கள். அப்படி எதுவும் கிடையாது. இங்கு போட்டி பயங்கரமாக இருந்தால்தான் வெற்றி நியாயமாக இருக்கும் என்பது என் கருத்து." எனப் பேசியிருக்கிறார்.