செய்திகள் :

இந்தியாவுக்கு வருவதில் கௌரவம்: மெஸ்ஸி

post image

இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வருவது குறித்து கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தான் மிகவும் கௌரவமாக கருதுவதாகக் கூறியுள்ளார்.

கடைசியாக 14 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் விளையாடிய மெஸ்ஸி, இந்தாண்டு இறுதியில் கேரளாவில் விளையாட இருக்கிறார்.

கொல்கத்தாவில் வரும் டிச.13ஆம் தேதி வரும் மெஸ்ஸி அகமதாபாத், மும்பை, தில்லிக்கு சுற்றுப் பயணம் செல்கிறார். கடைசியாக டிச.15ஆம் தேதி பிரதமரைச் சந்தித்து பேசவிருக்கிறார்.

கொல்கத்தாவின் சால்ட் லேக் திடலில் மெஸ்ஸியின் நிகழ்வு நடைபெற இருக்கிறது. மேலும், கொல்கத்தாவில் மெஸ்ஸியின் 25 அடி உயர சிலையை திறக்கபட இருக்கிறது.

இதற்கான டிக்கெட் விலை ரூ.3,500 இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2011-இல் மெஸ்ஸி கொல்கத்தாவில் விளையாடி இருந்தார்.

மும்பையில் கோட் கோப்பையில் சச்சின், தோனி, ஷாருக்கான் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்தியாவுக்கு வருவது குறித்து மெஸ்ஸி பேசியதாவது:

இந்த கோட் டூர் ஆஃப் இந்தியா 2025-இல் பங்கேற்பது எனக்கு மிகுந்த கௌரவமாக நினைக்கிறேன்.

இந்தியா மிகவும் சிறப்பு வாய்ந்த நாடு. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருந்த நல்ல நினைவுகள் எனக்குள் இருக்கின்றன.

இந்திய ரசிகர்கள் அற்புதமானவர்கள். இந்தியா, கால்பந்து ஆர்வமுள்ள நாடு. அழகான இந்தக் கால்பந்து மீதிருக்கும் எனது அன்பைப் பகிரும்போது புதிய தலைமுறை கால்பந்து ரசிகர்களை சந்திக்க மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன் என்றார்.

நட்பு ரீதியான போட்டியில் விளையாட கேரளாவுக்கு, மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

டேஹ்ராடூன்: குளிர்காலத்தை முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 25ம் தேதி மூடப்படும் என்று ஜோதிட நிபுணர்கள் கணித்து தேதியை அறிவித்துள்ளனர்.சார்தாம் என்று அழைக்கப்படும் நான்கு புகழ்பெற்ற... மேலும் பார்க்க

இப்படியொரு மேக்கிங்கா? பாராட்டுகளைப் பெறும் காந்தாரா சாப்டர் - 1!

நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. காந்தாரா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சாப்டர் - 1 என்கிற திரைப்படத்தை எடுத்துள்ளார். மன... மேலும் பார்க்க

நுனோ மென்டிஸ் அசத்தல்: 90-ஆவது நிமிஷத்தில் கோல்! பார்சிலோனாவை வென்ற பிஎஸ்ஜி!

சாம்பியன் லீக்கில் பார்சிலோனா அணியை நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி அணி 2-1 என வென்றது. இந்தப் போட்டியில் பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரர் நுனோ மென்டிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார். சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோ... மேலும் பார்க்க

பிக் பாஸ் - 9 தொடக்கம்: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

மக்கள் மத்தியில் பிரபலமான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில், தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.குறிப்பாக, சின்ன மருமகள் தொடர் இரவு 9.30 மணிக்கு ஒ... மேலும் பார்க்க

இந்திய துரோகியா? பக்தனா? வெளியானது மம்மூட்டி - மோகன்லால் பட டீசர்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன், நயன்தாரா, ரேவதி உள்ளிட்டோர் இயக்குநர் மகேஷ் நாராயண... மேலும் பார்க்க

இட்லி கடை முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான இட்லி கடை நேற்று (அக்.1) திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் ... மேலும் பார்க்க