டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?
இட்லி கடை முதல் நாள் வசூல் எவ்வளவு?
நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான இட்லி கடை நேற்று (அக்.1) திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருக்கின்றனர்.
வெளிநாட்டிலிருந்து தன் கிராமத்துக்கு திரும்பும் தனுஷ், தன் தந்தையின் தொழிலான இட்லி கடையை வெற்றிகரமாக நடத்தும் கதையில் சில உணர்வுப்பூர்வமான தருணங்கள் இருந்ததால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முக்கியமாக, பலரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், ராயனைத் தொடர்ந்து இயக்குநராக தனுஷ் இப்படத்திலும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவார் என்றே தெரிகிறது.
இந்த நிலையில், இப்படம் முதல் நாள் வசூலாக ரூ. 11 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார இறுதிக்குள் நல்ல தொகையை வசூலிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நெருப்பில் குளிக்கும் தெய்வம்... காந்தாரா சாப்டர் - 1 திரை விமர்சனம்!